இத்தாலியில் புதிய பிரதமரை தெரிவுசெய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

இத்தாலியில் புதிய பிரதமரை தெரிவுசெய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

இத்தாலியில் புதிய பிரதமரை தெரிவுசெய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2014 | 12:10 pm

இத்தாலி நாட்டின் அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் பிரகாரம் ஜனநாயக கட்சித் தலைவர் மெட்டியோ ரென்சிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக  இத்தாலிய பிரதமர் என்ரிக்கோ லிட்டா நேற்று அறிவித்ததுடன் அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாபதி  ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனநாயக கட்சித் தலைவர் , ரென்சி நாட்டின் பிரதமராக விரும்புவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் ,   பிரதமராகும் பட்சத்தில் இத்தாலியின் வயது குறைந்த பிரதமராக ரென்சி காணப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

லிட்டாவை விட 8 வயது இளமையான ரென்சி, கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் ஜனநாயக கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, நாடு ஸ்திரமன்ற நிலைக்குச் செல்லக் கூடாது என வலியுறுத்திய கட்சித் தலைவர் மெட்ரியோ ரென்சி, அரசாங்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான அழைப்பையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்