விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த இருவர் கைது

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த இருவர் கைது

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 1:37 pm

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இரண்டு சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு செல்வதற்கு தயாராக இருந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார்.

அத்துடன், கனடாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட கோப்பாயைச் சேர்ந்த இளைஞரொருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்