யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 12:30 pm

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த ஒருவாரகாலமாக குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் நிலவும் குருதித் தடடுப்பாட்டை நிவர்த்திசெய்யும் பொருட்டு, கொழும்பு மத்திய இரத்த வங்கியிலிருந்து குருதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.நந்தகுமாரன் தெரிவித்தார்.

நடமாடும் குருதி சேகரிப்பு நிலையங்களின் ஊடாக உரியமுறையில் குருதி சேகரிக்கப்படாமையே குருதி தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிலவகை குருதி வகைகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்