பெண்ணை அடைத்து வைத்து 15 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

பெண்ணை அடைத்து வைத்து 15 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

பெண்ணை அடைத்து வைத்து 15 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 4:25 pm

அமெரிக்காவில் தனது உறவுக்கார பெண்ணை 15 ஆண்டுகளாக வீட்டிற்குப் பின்னால் இருக்கும் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(52). அவர் தனது உறவுக்கார பெண்ணுக்கு 12 வயது இருக்கும்போதில் இருந்து அவரை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தனது வீட்டிற்குப்  பின்னால் ஒரு கொட்டகையைக் கட்டி அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி அங்கேயே அடைத்துவைத்து, 15 ஆண்டுகளாக  பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது ரவூலின் குடும்பத்தாருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இது குறித்து பொலிஸில் புகார் செய்யவில்லை.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணுக்கு 27 வயது இருக்கையில், அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல ரவூலின் குடும்பத்தார் உதவி செய்துள்ளனர்.
அப்பெண்ணும் தப்பிச் சென்று  பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸார் ரவூல் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்