பட்டதாரி இலங்கையர் ஒருவரின் சடலம் மலேசியாவில் மீட்பு

பட்டதாரி இலங்கையர் ஒருவரின் சடலம் மலேசியாவில் மீட்பு

பட்டதாரி இலங்கையர் ஒருவரின் சடலம் மலேசியாவில் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 5:29 pm

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

34 வயதான குறித்த இலங்கையர் தவறான பாலியல் உறவின் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மலேசியப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், பிரேதப் பரிசோதனையின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் உயிரிழந்து 4 முதல் 7 நாட்கள் வரையில் இருக்கக்கூடும் என மலேசிய குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி ஆணையாளர் கைரி அஹ்ரசா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் நண்பர் குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் நுழைய முடியாதிருந்த நிலையில், பாதுகாப்பு அலுவலரின் உதவியுடன் கதவை உடைத்து உட்சென்றுள்ளார்.

இதன்போது, இலங்கையரின் சடலம் படுக்கையில் அரை நிர்வாணமாகக் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறையிலிருந்து பொலிஸார் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் போதை மருந்துக் கருவியொன்றையும் பாலியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் பொம்மைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த மரணம் ஓரினச் சேர்க்கை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலத்தின் அருகில் ஆயுதங்கள் எவையும் கண்டெடுக்கப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனையின் பின்னரே இது கொலையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர் அண்மையில் மலேசியாவில் பட்டப்படிப்பை முடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.​

இந்த சம்பவம் தொடர்பில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்