பங்களாதேஷூடனான போட்டியில் மஹேல விளையாட மாட்டார்

பங்களாதேஷூடனான போட்டியில் மஹேல விளையாட மாட்டார்

பங்களாதேஷூடனான போட்டியில் மஹேல விளையாட மாட்டார்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 3:57 pm

பங்காளாதேஷூடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் உபாதை காரணமாக மஹேல ஜயவர்த்தன விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, மஹேல ஜயவர்த்தன உபாதைக்குள்ளாகியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  மஹேல ஜயவர்த்தன போட்டித்தொடரிலிருந்து விலகி நாடுதிரும்பவுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 முதலாவது கிரிக்கெட் தொடர் இன்று பங்களாதேஷ் சிட்டங்கொங் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி 4.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் உலகத்தரப்படுத்தலில் முதல் இடத்திலுள்ள இலங்கை அணி தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு, நடைபெறவுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்