தொகுதி வாரி முறையில் மாகாணசபைத் தேர்தல்?

தொகுதி வாரி முறையில் மாகாணசபைத் தேர்தல்?

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 9:38 pm

மாகாணசபைத் தேர்தலை தொகுதி வாரி முறையில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று  ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்
இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  சிரேஷ்ட உப தவிசாளர்  நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததாவது;

[quote]எமது சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதனை நான்  ஏற்றுக்கொள்கிறேன்.  உள்ளுராட்சி தேர்தல்களின் போது விருப்பு வாக்கு முறையை இல்லாமல் செய்து தொகுதி வாரி முறைக்கு கொண்டு வந்துள்ளோம்.  இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலையும் அவ்வாறு தொகுதி வாரியாக நடத்துவது தொடர்பில் ஆழமாக சிந்தித்து வருகின்றோம்.  உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது எமக்கு கிடைக்கும் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டு இறுதித் தீர்மானம் எடுப்போம்.[/quote]

காண்க காணொளி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்