தென் மாகாண முதலமைச்சர் இன்று சிறையில் தான் இருக்க வேண்டும் – அஜித் பிரசன்ன

தென் மாகாண முதலமைச்சர் இன்று சிறையில் தான் இருக்க வேண்டும் – அஜித் பிரசன்ன

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 7:44 pm

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கடமையைச் செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தென் மாகாண சபையின்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அஜித் பிரசன்ன இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது ;

[quote]சட்டவிரோத கூட்டம் மற்றும் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தமையே எனக்கு எதிராகக் காணப்படும் குற்றச்சாட்டாகும். அது இரண்டும் தவறு என்றால் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று சிறையில் தான் இருக்க வேண்டும் . கொழும்பில் இருந்துகொண்டு பச்சைத் தண்ணீரையும் ஆரவைத்துக் குடித்து 100 ரூபா வீதம் உண்டியலில் சேர்க்கும் கம்மன்பில நேற்று சிறையில் இருந்திருக்க வேண்டும். ஆளும் கட்சியில் இருந்துகொண்டு ஒரு சிலரை விமர்சித்ததற்காகவா இந்த நிலை என சந்தேகம் ஏற்படுகின்றது. இவ்வாறு அழுத்தம் கொடுக்கக் காரணம் தெரியவில்லை.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்