சர்ச்சைக்குரிய ‘இந்து மதம்’ தொடர்பான புத்தகத்தை மீளப்பெற்றது பதிப்பகம்

சர்ச்சைக்குரிய ‘இந்து மதம்’ தொடர்பான புத்தகத்தை மீளப்பெற்றது பதிப்பகம்

சர்ச்சைக்குரிய ‘இந்து மதம்’ தொடர்பான புத்தகத்தை மீளப்பெற்றது பதிப்பகம்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 12:11 pm

“இந்து சமயத்தின் வரலாறு” எனும் தலைப்பில் முன்னணி அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் எழுதி இந்தியாவில் வெளியான புத்தகங்களை மீளப்பெறுவது என அதன் பதிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெண்டி டானிகர் எனும் பெண் எழுத்தாளர் இந்து சமயம் சார்ந்த விடயங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்று கருதப்படுகிறது.

எனினும் சிக்ஷா பச்சாவ் அந்தோளன் எனும் அமைப்பினர், இந்தப் புத்தகம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும், அதில் பல தவறுகள் உள்ளன என்றும் கூறி வழக்கு தொடர்ந்தை அடுத்து புத்தகத்தை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியான அனைத்து புத்தகங்களையும் மீளப் பெறுவது எனத் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பென்குயின் நிறுவனத்துக்கும், புத்தகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இணையதளங்கள் கூறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்