காணாமற்போனவர்கள் குறித்த சாட்சியங்களை பதிவு செய்யத் திட்டம்

காணாமற்போனவர்கள் குறித்த சாட்சியங்களை பதிவு செய்யத் திட்டம்

காணாமற்போனவர்கள் குறித்த சாட்சியங்களை பதிவு செய்யத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2014 | 8:48 pm

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் குறித்த சாட்சியங்களை பதிவு செய்வதற்கு, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தவர்களை ஆணைக்குழு அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 14 ஆம் திகதிமுதல் 17 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

ஆணைக்குழுவின் முதற்கட்ட அமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

15 ஆம் திகதி தென்மராட்சி பிரதேச செயலகத்திலும், 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்திலும் காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்