ஏழாவது ஐ.பி.எல்; யுவராஜ் சிங்கை 14 கோடிக்கு ஏலமெடுத்தது ரோயல் சலஞ்சர்ஸ்

ஏழாவது ஐ.பி.எல்; யுவராஜ் சிங்கை 14 கோடிக்கு ஏலமெடுத்தது ரோயல் சலஞ்சர்ஸ்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 1:05 pm

ஏழாவது இந்தியன் பிறிமியர் லீக் (IPL)  தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வருட ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட 514 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஏலத்தில் நட்சத்திர வீரர் யுவராஜ்சிங் அதிக தொகையான 14 கோடி (2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இந்திய ரூபாவிற்கு ஏலமெடுக்கப்பட்டார். ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணய விலையை விட (2 கோடி) 7 மடங்கு விலைக்கு வாங்கியது.

முதலாவது வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை இரண்டு கோடி, டெல்லி டெயார் டேவில்ஸ் ஐந்து கோடிக்கு (0.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒப்பந்தம் செய்தது.

இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சனை 9 கோடி ( 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) கொடுத்து டெல்லி டெயார் டேவில்ஸ் தக்கவைத்துக் கொண்டது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட முன்னணி வீரர்கள்:
யுவராஜ் சிங் – 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – RCB
தினேஸ் கார்த்திக் – 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – DD
கெவின் பீட்டர்சன் – 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – DD
மிச்செல் ஜோன்சன் –  1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – KXIP
டேவிட் வோனர்  – 0.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – SRH
ஜெக் கலிஸ் –  0.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – KKR
முரளி விஜய் – 0.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – DD
பப் டூ பிளஸிஸ்  – 0.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – CSK
டெரன் சமி  – 0.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – SRH
பிரண்டன் மெக்கலம்  – 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – CSK
ஜோர்ஜ் பெய்லி – 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – KXIP
விரேந்தர் ஷெவாக்  – 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – KXIP


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்