இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சீனா

இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சீனா

இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சீனா

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 2:26 pm

மனித உரிமைகள் என்ற போர்வையில் சில நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினரை, சீன வெளிவிவகார அமைச்சர் வான்க் ஜீ சந்தித்து கலந்துரையாடியபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக சீனாவின் ஜின்ஜூவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் சிரேஷ்ட தலைவர்கள் பலரையும் வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் இறைமை, சுயாதீனத் தன்மை என்பவற்றைப் பாதுகாப்பதற்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென சீன வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமது உள்ளக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் இலங்கை மக்களுக்கு உள்ள இயலுமை தொடர்பில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸூக்கும், சீன உப ஜனாதிபதி லீ யுவன்வாவோக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சீனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்