ஆசிரியர் – பிரதேச மக்களிடையே மோதல்

ஆசிரியர் – பிரதேச மக்களிடையே மோதல்

ஆசிரியர் – பிரதேச மக்களிடையே மோதல்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 1:15 pm

பொகவந்தலாவை, மோரா தோட்டத்தில் ஆசிரியர் ஒருவருக்கும், பிரதேசத்தை சேர்ந்த பிரிதொரு சாராருக்கும் இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்