அவுஸ்திரேலியா மீதான சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பார்வை நியூஸிலாந்து பக்கம்

அவுஸ்திரேலியா மீதான சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பார்வை நியூஸிலாந்து பக்கம்

அவுஸ்திரேலியா மீதான சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பார்வை நியூஸிலாந்து பக்கம்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 1:12 pm

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணித்த பலர் கைது செய்யப்பட்டமையினாலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகள் காரணமாகவும் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் சட்டவிரேத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பார்வை நியூஸிலாந்து பக்கம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சட்டவிரோதமாக நியூஸிலாந்திற்கு செல்வதற்கு தயாராக இருந்த 75 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேருவலை மற்றும் மொரகல்ல பகுதயில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 60 ஆண்களும் 09 பெண்களும் உட்பட 06 சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதாகியுள்ள சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேரந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்