அல்ஜீரிய விமான விபத்து; தவறான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள்

அல்ஜீரிய விமான விபத்து; தவறான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள்

அல்ஜீரிய விமான விபத்து; தவறான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 2:36 pm

அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அந்நாட்டு  ஊடகங்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என அல்ஜீரிய அரசாங்கமும் இராணுவமும் அறிவித்துள்ளன.

அல்ஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

99 இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் பணித்த விமானத்தில் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த விமானத்தில் 78 பேர் பயணித்ததாக அல்ஜீரிய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 77 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையினால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்