அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு விருப்பம் – ஐ.நா

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு விருப்பம் – ஐ.நா

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு விருப்பம் – ஐ.நா

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2014 | 12:06 pm

இலங்கையில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் கூடிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி கூறியுள்ளார்.

இதன் மூலம், அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைப் தீர்ப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் துணைத் தலைமைச் செயலாளரும் ஆசிய பசுபிக் பிராந்திய ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனருமான ஹாயோ யிங் சூ வட மாகாண முதலமைச்சரிடம் இதனை கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் வட மாகாணம் உட்பட பல பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபை கூடுதலாக ஈடுபட முடியும் எனவும், அதற்காக ஆராய்வதற்காவே இந்தப் பயணத்தை தான் மேற்கொண்டதாகவும் அவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

வட மாகாணம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையின் துணைத் தலைமைச் செயலாளரிடம்  தான் வலியுறுத்தித்தியதாக, இந்த சந்திப்பினை தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தம்மால் இயலுமான அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் முனைவதாக ஐ.நா உயரதிகாரி தம்மிடம் தெரிவித்தாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது தரப்பிலிருந்து ஐ நா அதிகாரியிடம் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஹாயோ யிங் சூ வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்