மாத்தறை ஐ.தே.க குழுத் தலைவர் தவிர ஏனைய வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன

மாத்தறை ஐ.தே.க குழுத் தலைவர் தவிர ஏனைய வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 9:03 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்பட்டன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள  வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கை அந்தந்த மாவட்ட செயலங்களில் நடைபெற்றன.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்டத்தில் 14 பிரதான கட்சிகள் மற்றும் 05 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 380 வேட்பாளர்கள் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் சமூகமளிக்காமையினால் அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவில்லையென எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்