பிரபாகரன் 500 மில்லியனை வாங்கிக்கொண்டு தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார் – பொன்சேக்கா

பிரபாகரன் 500 மில்லியனை வாங்கிக்கொண்டு தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார் – பொன்சேக்கா

பிரபாகரன் 500 மில்லியனை வாங்கிக்கொண்டு தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார் – பொன்சேக்கா

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 7:56 pm

ஜனநாயகக் கட்சியின் கூட்டம் ஒன்று, கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தலைமையில் நேற்று அலுத்கம – தர்கா நகரில் இடம்பெற்றது.

இதன்போது, ஆட்சியாளருக்கு ஆதரவான அரசியல்வாதிகளே இன்று பிரதேச மற்றும் மாகாண சபை மட்டத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“நாங்கள் பிரபாகரனின் ஆவியெனவும் தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்கு 500 மில்லியன் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார். இதனூடாக, ஒருவர் வெற்றி பெற்றார். இந்த 500 மில்லியனைக் கொண்டு பிரபாகரன் மலேஷியாவில் கடற்புலிகளுக்கு தேவையான படகுகளை வாங்கினார். அந்த படகுகளைக் கொண்டு வந்து எமது கடற்படையினரையும் இராணுவத்தினரையும் கொலை செய்தனர். இப்போது யார் துரோகியென நீங்கள் கூறுங்கள்?”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்