பழைய முறிகண்டி கோயில் அருகில் வாகன விபத்து; 6 பேர் பலி (Video)

பழைய முறிகண்டி கோயில் அருகில் வாகன விபத்து; 6 பேர் பலி (Video)

பழைய முறிகண்டி கோயில் அருகில் வாகன விபத்து; 6 பேர் பலி (Video)

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 6:51 am

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி கோயில் அருகில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிருழந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழப்பாணத்திற்கு சென்றுகொண்டிருந்த டிப்பருடன் பின்னால் பயணித்த வேன் ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

A9 Accident1 A9 Accident3


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்