பரீட்சார்த்தமாக செயற்பட ஆரம்பித்துள்ளது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

பரீட்சார்த்தமாக செயற்பட ஆரம்பித்துள்ளது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

பரீட்சார்த்தமாக செயற்பட ஆரம்பித்துள்ளது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 8:20 am

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம், முதல் கட்ட பரீட்சார்த்த  நடவடிக்கைகளுக்காக மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தற்போது 200 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடிவதாக, இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், வர்த்தக மற்றும் நடவடிக்கை பிரிவின் பிரதி பொதுமுகாமையாளருமான செனஜித் தசநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காகவே நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் மின் உற்பத்தி நிலையத்தை செயழிலக்கச் செய்யும் எண்ணத்துடனேயே சோதனை பரீட்சார்த்த  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை விரைவில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இதேவேளை, களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் டேர்பயினில் ஏற்பட்ட கோளாறு இதுவரையில் சீர் செய்யப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், வர்த்தக மற்றும் நடவடிக்கை பிரிவின் பிரதி பொதுமுகாமையாளருமான செனஜித் தசநாயக்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்