தோடம்பழங்களுக்குள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் பேதைப் பொருள்

தோடம்பழங்களுக்குள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் பேதைப் பொருள்

தோடம்பழங்களுக்குள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் பேதைப் பொருள்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 8:24 am

தோடம்பழங்களுக்குள் சூட்சமமான முறையில் மறைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயே்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் 12 தோடம்பழங்களுக்குள் ஹெரோய்ன் போதைப் பொருளை மறைத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தலிருந்து போதைப் பொருளை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளார்.

ஒரு தோடம்பழத்திற்குள் 80 கிராமுக்கு மேல் ஹெரோய்ன் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்