சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் மீண்டும் இந்தியா

சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் மீண்டும் இந்தியா

சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் மீண்டும் இந்தியா

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 12:58 pm

இந்திய ஒலிம்பிக் கழகத்துக்கான தேர்தல் சட்டரீதியாக  நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்திய ஒலிம்பிக் கழகத்துக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான (ஐ.ஓ.ஏ.)  நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பெயரில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தகுதி நீக்கம் செய்திருந்தது சர்வதேச ஒலிம்பிக் கழகம்.

இதனால், தற்போது ரஷ்யாவில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியினை ஏந்தி செல்ல முடியாமல், சர்வதேச ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதித்த தடை இன்று நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்