கோச்சடையான் பாடல் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

கோச்சடையான் பாடல் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

கோச்சடையான் பாடல் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 4:48 pm

ரஜினிகாந்த் மகள் இயக்கியுள்ள 3-டி அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிப்ரவரி 28-ம் திகதி நடைபெறள்ளது.

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, நாசர் ஆகியோர் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘எங்கே போகுதோ வானம்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்தது. இந்தப் பாடலை எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் சிறப்பு.

அதேபோல, ஷோபனாவும், ரஜினியும் இணைந்து நடனமாடும் போட்டிப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் சிவசங்கரின் மகன்மார் அஜய், விஜய் இருவரும் நடனம் அமைத்துள்ளனர். இந்த படத்தின் முழுப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

‘கோச்சடையான்’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் நிலையில், இசை வெளியீடு குறித்த செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்