கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 11:12 am

கேகாலை – கொழும்பு தனியார்  பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேரக்கணிப்பாளர் ஒருவர் பஸ் ஊழியரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை- கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேகாலை- மாவனெல்ல தனியார் பஸ் ஊழியர்களும்  பணி பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகபர் கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்