ஐ.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை; ஸ்ரீநிவாசனின் பதவியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஐ.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை; ஸ்ரீநிவாசனின் பதவியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஐ.பி.எல் ஆட்டநிர்ணய சர்ச்சை; ஸ்ரீநிவாசனின் பதவியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 12:41 pm

இந்திய பிறிமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகத் தலைவர் குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மாமனாரான ஸ்ரீநிவாசன் தலைமைப் பதவிகளில் தொடரலாமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

சூதாட்டக்காரர்களுக்கு சட்டவிரோதமாக தகவல்களை வழங்கியமை தொடர்பான சூதாட்ட விசாரணையில், என்.ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் குற்றவாளியாக காணப்பட்டிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருமான என்.ஸ்ரீனிவாசன் அண்மையில் நிறைவேற்’றப்பட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாக வியூக சட்டமூலத்திற்கு அமைய பேரவையின் தலைவராகவும் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், மருமகனான குருநாத் மெய்யப்பன் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீனிவாசன் மீதான அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

ஆட்டநிர்ணயத்தில் குற்றவாளியாக காணப்பட்டமை தொடர்பில் குருநாத் மெய்யப்பன் கருத்துக்கள் எதனையும் வெளியிடாத போதிலும், தம் மீதான குற்றச்சாட்டுக்களை கடந்த ஆண்டு அவர் நிராகரித்திருந்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூவர் அடங்கிய குழுவை இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.

இந்த குழு 170 பக்கங்களை கொண்ட தமது அறிக்கையை நேற்று சமர்ப்பித்துடன், ஐ.பி.எல் போட்டிகளில் இடம்பெற்ற ஆட்டநிர்ணம் தொடர்பில் மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்