ஐ.நா சபையின் பிரதிநிதிகள் வடபகுதிக்கு விஜயம்

ஐ.நா சபையின் பிரதிநிதிகள் வடபகுதிக்கு விஜயம்

ஐ.நா சபையின் பிரதிநிதிகள் வடபகுதிக்கு விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2014 | 9:29 pm

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் ஹோயலொங் சூ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நெண்டி ஆகியோர் அடங்கிய குழு இன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்தக் குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

இதன்போது கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி அரச அதிபர்  ரூபவதி கேதீஸ்வரன், அம்மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான முன்வைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, இவர்கள் முல்லைத்தீவிற்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவிற்கான விஜயத்தின்போது கள்ளப்பட்டில் அமைந்துள்ள ஐஸ் தொழிற்சாலைக்கான உயர் அழுத்த மின்கட்டமைப்பினைத் திறந்து வைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், மக்களுடைய பிரச்சினைகளை அறிக்கை வடிவில் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் மக்களிடம் குழுவினர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்