இஸ்லாமிய பெயரையும் ட்விட்டரில் அறிவிப்பார் யுவன்?

இஸ்லாமிய பெயரையும் ட்விட்டரில் அறிவிப்பார் யுவன்?

இஸ்லாமிய பெயரையும் ட்விட்டரில் அறிவிப்பார் யுவன்?

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2014 | 11:48 am

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராகிவிட்டார் என்றவுடன் அவரது பெயரை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஊடகங்கள் ஒவ்வொரு பெயரை அவருக்கு சூட்டினாலும் நிஜ பெயரை அவர் இன்னும் அறிவிக்கவில்லை.

தான் மதம் மாறிய விடயத்தை எப்படி தனது ட்விட்டரில் வெளியிட்டாரோ, அதைப்போலவே தனது பெயரையும் ட்விட்டரின் மூலமாகவே அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற எந்த நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்ற தரமணி படத்தின் ஊடக சந்திப்பிலும் அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சித்த இயக்குனர் ராமிற்கு கிடைத்தது ஏமாற்றமே.

ஊடக சந்தப்பில் கலந்துகொண்டால் ”தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை பற்றியேதான் கேள்வி கேட்பார்கள். பத்திரிகையாளர் சந்திப்பின் நோக்கமே திசை மாறிவிடும்” என்று கூறிவிட்டாராம் யுவன்.

அவர் வராததற்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. அவர் தற்போது தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறாராம். அது வளர்ந்ததும் இஸ்லாம் முறைப்படி அதை வடிவமைத்துக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். ஐந்து வேளை தொழுகை, குர்ஆன் என்று முற்றிலும் மாறியிருக்கும் அவரை சற்று வியப்போடு பார்க்கிறது அவரது உறவினர்கள் வட்டாரம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்