இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2014 | 2:39 pm

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இலங்கை மீனவர்கள் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம் பகுதியில் கைதுசெய்யப்பட்ட இந்த மீனவர்களுக்குச் சொந்தமான 05 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த படகுகளில் இருந்த ஐயாயிரம் கிலோகிராமிற்கும் அதிகமான மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நாகபட்டினத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்