வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 9:43 pm

புத்தளம் மன்னார் பிரதான வீதியில் சகமிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாகக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

புத்தளத்திலிருந்து வண்ணத்திவில்லு பகுதிக்கு சென்ற டிப்பர் வண்டி ஒன்றுடன் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கில் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தின் போது மோட்டார் சைக்களின் எரிப்பொருள் தாங்கி வெடித்ததை அடுத்து டிப்பர் வண்டி முற்றாக எறிந்து சேதமாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்