வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 2:27 pm

வடமாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

உலக சுற்றுச் சூழல் தினமான எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பாக வட மாகாண விவசாய அமைச்சில் இன்று காலை 9.30 அளவில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

யாழ்.வணிகர் சங்கத்தினர் மத்திய சுற்றாடல் மற்றும் வடமாகணத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுடன் மாகாண விவசாய அமைச்சர் இது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்