ரஹ்மான், கைஸ் முதல் சதங்கள்; சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பங்களாதேஷ்

ரஹ்மான், கைஸ் முதல் சதங்கள்; சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பங்களாதேஷ்

ரஹ்மான், கைஸ் முதல் சதங்கள்; சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பங்களாதேஷ்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 5:25 pm

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியின், தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சிட்டக்கொங்கில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுக்களை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷ் சார்பாக ஷம்சுர் ரஹ்மான் 115 ஓட்டங்களையும், இம்ருல் கைஸ் 106 ஓட்டங்களையும் பெறறுக்கொடுத்து இருவரும் தனது முதலாவது சதத்தினையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்டுக்களையும், தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதேவேளை, தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 587 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது முச்சசதத்தைப் பூர்த்தி செய்த குமார் சங்கக்கார, 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மஹேல ஜயவர்தன 72 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கையை விட 178 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ள பங்களாதேஷ், நாளைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்