யானைக் குட்டிகள் கடத்தப்படுவதை தடுக்க ஒத்துழைப்பைக் கோருகிறது வனவிலங்குகள் திணைக்களம்

யானைக் குட்டிகள் கடத்தப்படுவதை தடுக்க ஒத்துழைப்பைக் கோருகிறது வனவிலங்குகள் திணைக்களம்

யானைக் குட்டிகள் கடத்தப்படுவதை தடுக்க ஒத்துழைப்பைக் கோருகிறது வனவிலங்குகள் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 5:33 pm

காடுகளில் இருந்து யானைக் குட்டிகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு வனவிலங்குகள் திணைக்களம் மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.

யானைக்குட்டிகளை கடத்துவதற்கு சில குழுக்கள் திட்டமிட்டு வருகின்றமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அத்தகைய தகவல்களை இதுவரை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யானைக் குட்டியொன்றை கடத்தமுற்பட்ட நடவடிக்கையொன்று மஹவ பிரதேசமக்களால் நேற்று வழங்கப்பட்ட தகவலுக்கமைய, வனவிலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறான தகவல்கள் இருப்பின், 24 மணித்தியாலமும் செயற்படும் 011 2 888 585 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச். டீ. ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்