மேல் மாகாணத்தின் 17 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன

மேல் மாகாணத்தின் 17 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன

மேல் மாகாணத்தின் 17 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 8:35 am

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக மேல் மாகாணத்தின் 17 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

கம்பஹா நகர எல்லைக்குட்பட்ட 13 பாடசாலைகளும், களுத்துறை நகர எல்லைக்குட்பட்ட 4 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜீ.என்.அயிலப்பெரும தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தென் மாகாணத்தின் 25 பாடசாலைகள் இன்று முற்பகல் 10.30 மணிமுதல் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

காலி நகரை அண்மித்த 15 பாடசாலைகளும் மாத்தறை நகரை அண்மித்த 10 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் பி.ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்