முற்றுப் பெற்றது பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

முற்றுப் பெற்றது பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

முற்றுப் பெற்றது பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 12:30 pm

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கெவின் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்துக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். ஆயினும் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததில் வருத்தமே. கடந்த 9 ஆண்டுகளில் நானும், எனது சகஅணியினரும் இணைந்து படைத்த சாதனைகளுக்காக பெருமை கொள்கிறேன். இங்கிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்த காலத்தில் விளையாடியதும் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதும் எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என கருதுகிறேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக நான் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது என நம்புகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். எனினும் இங்கிலாந்துக்காக இனி விளையாடமுடியாது என்பது வருத்தமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் கெவின் பீட்டர்சன்.”

33 வயதாகும் பீட்டர்சன் 104 டெஸ்ட் போட்டியில் 8,181 ரன்களையும், 136 ஒருநாள் போட்டியில் 4,440 ஓட்டங்ளையும் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்