மார்ச் 29 மாகாண சபைத் தேர்தல்

மார்ச் 29 மாகாண சபைத் தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 1:08 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் 29ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய தெரிக்கின்றார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தன.

இந்த இரண்டு மாகாண சபைகளுக்காகவும் 155 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 40 உறுப்பினர்களும், கம்பஹா மாவட்டத்தழில் 40 உறுப்பினர்களும், களுத்துறை மாவட்டத்தில் 22 உறுப்பினர்களும்  மேல் மாகாண சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தென் மாகாண சபைக்காக காலி மாவட்டத்தில் 22 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 17 உறுப்பினர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 58,98,618 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்கள் மதவழிபாடுகளுடன் தமது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்