பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவிற்கு அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவிற்கு அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 9:02 am

காஷ்மீர் விவகாரம் குறித்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், சமாதானத்தை நிலைநாட்டும் எந்தவொரு முன்மொழிவுகள் குறித்து கவனம் செலுத்த தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்கால பாகிஸ்தானும், காஷ்மீரும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாக அமையும் என காஷ்மீர் ஒருமைப்பாட்டு தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து அமைதித் தீர்வு எட்டப்பாவிடின் நிச்சமற்ற நிலையிலும், முரண்பாடுகள் தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நவாஸ் செரீப் கூறியுள்ளார்

உணர்ச்சி பூர்வமாக இந்த விடயத்தை இந்தியா புரிந்துகொள்ளும் எனவும்,   சமாதானப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு குறித்து இந்தியா சாதகமான பதிலை வழக்கும் எனவும் நவாஸ் செரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்கள் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க இடமளிக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் உரிமை தொடர்பில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக சர்ச்சை நீடிப்பதுடன், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மோதல்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்