பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துப் பிழைகள்; வாசுதேவ நாணயக்கார விளக்கம்

பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துப் பிழைகள்; வாசுதேவ நாணயக்கார விளக்கம்

பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துப் பிழைகள்; வாசுதேவ நாணயக்கார விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2014 | 3:48 pm

இலங்கை அரசியலமைப்பின் படி, பிரதான இரண்டு மொழிகளாக சிங்களமும் தமிழும் திகழ்கிறது.

ஆங்கில மொழி இணைப்பு மொழி என்ற நிலையில் தான் உள்ளது.

இணைப்பு மொழியான ஆங்கில மொழியையும், அரசியலமைப்பு ரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியில் அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு அரசாங்கம் உயர்த்தியிருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் சகல அரச நிறுவன கட்டடங்களிலும் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய பெயர்ப்பலகைகள் அமைய வேண்டும் என்பது தான் கொள்கையாக உள்ளது.

அத்தோடு, அரச ஆவணங்களும் கூட மும்மொழிகளிலும் அமைந்திருக்க வேண்டும்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள அரச கட்டடங்கள், பொது இடங்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் பலவற்றிலும் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன.

அரச பேருந்தொன்றில் ‘கர்ப்பிணித் தாய்மார்களுக்காக’ என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரியாக எழுதப்பட்டிருக்க, தமிழில் மட்டும் ‘கர்ப்பிணி நாய்மார்களுக்காக’ என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றமை பற்றி உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியமை தொடர்பில் பி.பி.சி தமிழோசை, தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியுள்ளது.

இதன் போது, ‘அவ்வாறு தவறுகள் நடந்துள்ள இடங்களை நாங்கள் கேள்விப்பட்டு திருத்தியுள்ளோம். நாங்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்கிறோம்’ என அமைச்சர் கூறியுள்ளார்.

“தமிழ் எழுத்துக்களை தமிழ் தெரிந்தவர்களிடமிருந்து எழுதிக்கொள்கின்றனர். ஆனால், தமிழ் எழுத்துக்களைப் புரியாத ஒருவர் தான் அவற்றை வரைந்து வர்ணம் பூசுவார். அதனால் தான் தவறு நடக்கிறது. பாராளுமன்ற பெயர்ப் பலகையிலும் இவ்வாறான தமிழ்ப் பிழை நடந்திருக்கிறது. அந்தப் பிழையை அண்மையில் திருத்தியிருக்கிறோம்’ எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

mistakes6

 

mistakes5

mistakes4

mistake3

mistake2

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்