நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 9:12 pm

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரின், கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான வட மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் உட்பட இரண்டு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய எஸ்.லெலின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பிரதான சந்தேகநபரான வடமாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனின் மேன்முறையீட்டுக்கு அமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டேனியல் ரெக்சிஷிகன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில், அவரது மனைவி உட்பட மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்