கொழும்பின் வரலாற்றைத் தேடிய நியூஸ்பெஸ்ட்டின் பயணம்

கொழும்பின் வரலாற்றைத் தேடிய நியூஸ்பெஸ்ட்டின் பயணம்

கொழும்பின் வரலாற்றைத் தேடிய நியூஸ்பெஸ்ட்டின் பயணம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 8:38 pm

எமது நாட்டிற்கு வருகைதந்த முதல் ஆக்கிரமிப்பாளர்களாக என போர்த்துகேயரை குறிப்பிடலாம்.

அதற்கிணங்க கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்ட கோட்டைகளின் எச்சங்களைத் தேடிச் செல்கிறது நியூஸ்பெஸ்ட்.

1505ஆம் ஆண்டின் நவம்பர் மாத நடுப் பகுதியில் ஒரு நாள் போர்த்துகேய கொடிகளைத் தாங்கிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

நூற்றாண்டு காலமாக இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய தீவாக இருந்த இலங்கைத் தீவின் தனித்துவம் மற்றும் சுதந்திரம் போர்த்துகேயரின் வருகையுடன் முடிவுக்கு வந்தது.

அன்றைய கால கட்டத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் அமைந்திருந்த கோல்டன் பூங்காவில் இருந்த நினைவுச் சின்னங்கள் தற்போது கொழும்புத் துறைமுகத்தில் காட்சியளிக்கின்றன.

தமது ஏகாதிபத்திய வாதத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தி அதில் திருப்தி கண்ட போர்த்துகேயர் சில காலத்தின் பின்னர் எமது நாட்டை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் 1517 ஆம் ஆண்டு 17 கப்பல்களுடன் போர்த்துகேயர்கள் 2ஆவது முறையாக இலங்கைக்கு வந்தனர்.

கொழும்பை  இலக்கு வைத்து படையெடுக்கும் நோக்கில் மீண்டும் இலங்கையை வந்தடைந்த இவர்கள் கொழும்பில் கோட்டை ஒன்றை அமைத்தனர்.

லெபோர்தே பிரிடோர்வின் திட்டத்திற்கிணங்க இவர்களின் கோட்டை அமையபெற்றது.

இதனை பிரித்தானிய காலகட்டட திட்டத்திற்கமைவாக 12 காவலரண்களை கொண்டு இவர்கள் நிர்மாணித்தார்கள்.

இந்த காவலரண்களின் எஞ்சியுள்ள சிதைவுகள் இன்றும் காணப்படுகின்றன.

1656ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போர்த்துகேய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரேவியர் நீர்வழிப்பாதை இன்றும் காணப்படுகின்றது.

Rio Director என்றழைக்கப்பட்ட இந்த வீதி கொழும்பிலுள்ள பரபரப்பான வீதிகளில் ஒன்றான புறக்கோட்டையின் பிரதான வீதியாக இன்று மாற்றமடைந்துள்ளது.

அவ்வாறு பெயர் மாற்றமடைந்த புறக்கோட்டை பிரதான வீதியின் ஊடாக முற்காலத்தில் ‘பூர்டா ரெய்னா’ என்றழைக்கப்பட்ட தற்போதைய பிசோ நுழைவாயிலைத் தேடி எமது பயணம் தொடர்ந்தது.

இந்த நுழைவாயில் கைமன் நுழைவாயில் என்று அழைக்கப்படுவதுடன், அதன் மணிக் கோபுரம் அன்றைய காலத்தில் இருந்த அதே இடத்தில் இன்றும் காணப்படுகிறது.

இந்த மணி கோட்டையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வரலாற்று பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கைமன் நுழைவாயிலுக்கு நுழைவதற்கான பாலம் ஒன்று அமைந்துள்ளதுடன் புனித ஜோன் கால்வாய் அதனூடாக அகழி வடிவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கால்வாயில் வீசப்படுகின்ற குப்பைகளை உணவாக உட்கொள்வதற்கு முதலைகள் இந்த கால்வாயில் கூடுகின்றமையால் இந்த நுழைவாயில் கைமன் நுழைவாயில் என்று அழைக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் உள்ள இரகசிய நுழைவாயிலைத் தேடிய நியூஸ்பெஸ்டின் பயணம் தொடரும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்