நானுஓயாவில் வாகன விபத்து; 20 பேர் காயம்

நானுஓயாவில் வாகன விபத்து; 20 பேர் காயம்

நானுஓயாவில் வாகன விபத்து; 20 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 10:06 pm

நுவரெலியா – நானுஓய – ஹோர்டன்தென்ன பகுதியில் உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளர்.

காயமடைந்தவர்களில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உழவு இயந்திரத்தின் பின்புற பகுதி கழன்று சென்றமையே விபத்துக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆறு பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்