தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 2:08 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினமான இன்று பேரணிகளை முன்னெடுக்க வேண்டாமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பேரணிகளில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அத்துடன் பேரணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள்  கைப்பற்றப்படும் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

வேட்புமனு தாக்கல்செய்த தினம் முதல், தேர்தல் முடிவடைந்து ஒருவார வரை பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவது தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் நேற்று 13 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், 06 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இரண்டு மாகாணங்களிலும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை தடுப்பதற்கு பொலிஸார் மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்