‘சிவப்பு’ இலங்கைத் தமிழர் உணர்வை கொண்டுவரும் – இயக்குனர் சத்யசிவா

‘சிவப்பு’ இலங்கைத் தமிழர் உணர்வை கொண்டுவரும் – இயக்குனர் சத்யசிவா

‘சிவப்பு’ இலங்கைத் தமிழர் உணர்வை கொண்டுவரும் – இயக்குனர் சத்யசிவா

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 4:45 pm

காதல், அதைச் சுற்றி அரசியல், தமிழ் மக்களின் உணர்வுகள் இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கும் வகையில் ‘சிவப்பு’ திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் சத்தியசிவா தெரிவித்துள்ளார்.

சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக் குடி, பாண்டிச்சேரி என கடல் சார்ந்த இடங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜ்கிரண், செல்வா, தம்பி ராமையா, நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க இலங்கை சம்பந்தப்பட்ட திரைப்படம் இல்லை எனினும் இலங்கை தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த ஒரு திரைப்படமாக அமையும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

[quote]கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்தான் கதைக் களம். அங்கே ராஜ்கிரண் மேற்பார்வையாளராக இருக்கிறார். அகதி முகாமில் இருப்பதற்கு பலருக்கு விருப்பமில்லை. பலர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்சுப் போகணும்னு நினைக்கின்றனர். அங்கே போனால் குடியுரிமை பெறலாம் என்பது அவர்கள் எண்ணம். அதனால் உயிரைப் பணயம் வைத்து முகாமில் இருந்து போகின்றார்கள். அப்படி போறவங்க, சிலரால ஏமாற்றப்படுறாங்க. முகாமுக்கும் திரும்ப முடியாம, அஸ்திரேலியாவுக்கும் போக முடியாம தவிக்கிறாங்க. அப்போ.. ராஜ்கிரண்கிட்ட தஞ்சம் கேட்குறாங்க. அந்த இடத்துல இலங்கை தமிழ் பெண்ணுக்கும் தமிழகப் பையனுக்கும் நடக்குற காதல், அந்த காதலால் ஏற்படுற பிரச்சினைகள்தான் ‘சிவப்பு’ கதை [/quote] என்கிறார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் வரலாற்றைச் சொல்லியிருப்பதாக தெரிவிக்கும் இயக்குனர் இந்த திரைப்படத்தினை படம் பார்த்தால் இலங்கைக்கும் தமிழகத்திற்குமான உறவு என்ன? இலங்கைத் தமிழர்கள் யார்? போன்ற விடயங்களை தெரிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

[quote]தூங்கிட்டு இருப்போம். படபடன்னு சத்தம் கேட்கும். உடனே எழுந்து ஏதாவது இடத்துல போவோம். இப்பவும் அந்த சத்தம் எங்களை ரொம்ப பாதிக்குது’ என்று முகாமகளில் உள்ளவர்கள் சொன்னார்கள். இதையெல்லாம் காட்சிகளா படத்துல வச்சிருக்கேன்.[/quote] என்கின்றார் இயக்குனர்.

[quote]படம் தணிக்கையில் தடைசெய்யப்படும். திரையிட முடியாது என்று தமிழ் சினிமாவுல நிறைய அனுபவம் உள்ளவர்களே சொன்ன போது பயந்துட்டேன். எனினும் படம் தணிக்கை குழு திரையிட அனுமதி வழங்கியதும் பயமெல்லாம் போய்விட்டது. [/quote] என இயக்குனர் சத்யசிவா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்