சட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது

சட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது

சட்டவிரோதமாக செப்பு கடத்த முற்பட்ட நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 11:56 am

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்த இரண்டு கோடியே, 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சுத்திகரிக்கப்படாத செப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த செப்பு அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கொழும்பு வர்த்தகர் ஒருவரால் பிலாஸ்டிக் பொருட்கள் என்ற போர்வையில் இவை ஏற்றுமதி செய்யப்படவிருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்காக சுத்தகரிக்கப்படாத செப்பை ஏற்றுமதி செய்வது இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் சுங்கப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்