குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 7:19 pm

30 பில்லியன் யூரோக்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சோச்சி நகரில் கோலாகலமாக இன்று ஆரம்பமாகியுள்ளன.

30 வருடங்களுக்கு பின்னர் அங்குரார்ப்பண நிகழ்விற்கு முன்னதாக போட்டிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் 98 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

87 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்

டொமிக்கா, ஸிம்பாப்வே, மோல்டா, பரகுவே, டோஹோ, டொங்கா, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகள் குளிர்காலப் ஒலிம்பிக் போட்டிகளுக்குள் புதிதாக பிரவேசித்துள்ளன.

ஹோட்டல் நிர்மாணம் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படும் நிலையில், போட்டி இடம்பெறும் பகுதிகளை முழுமையாக தயார்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பாட்டுக் குழுவினர் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்