காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது தவறு – அனந்தி சசிதரன்

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது தவறு – அனந்தி சசிதரன்

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது தவறு – அனந்தி சசிதரன்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 10:02 pm

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது, உயிரோடு இருந்தாற் கூட இல்லாமல் போவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க கூடிய நிலைமையை தான் ஏற்படுத்தும் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ஒழுங்கில் அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர்களுடைய ஒன்றிணைப்பில் மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான தமது உறவுகள் சித்திரவதைக்கு உட்பட்டு இருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறிந்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் மரண சான்றிதல் வழங்குவது என்பது [quote]உயிரோடு இருந்தாற் கூட இல்லாமல் போவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க கூடிய நிலைமையை தான் ஏற்படுத்தியிருக்கின்றது.[/quote] எனவும் குறிப்பிட்டார்.

எனவே மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டுமெனவும், [quote]இவ்வளவு காலம் தங்களுடைய உறவுகளை தேடி அழைந்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என அறிய அவர்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் இப்படியான மரண சான்றிதழ்களை எடுப்பது அவர்களுடைய உறவுகள் கொல்லப்படுவதற்கான வாய்ப்பை நாங்களே உருவாக்கி கொடுக்கிற மாதிரியான சூழலை உருவாக்குகின்றது. [/quote]எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்