கடுவெல மற்றும் மாலபே பகுதிகளில் நாளை நீர் வெட்டு

கடுவெல மற்றும் மாலபே பகுதிகளில் நாளை நீர் வெட்டு

கடுவெல மற்றும் மாலபே பகுதிகளில் நாளை நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 2:18 pm

கொழும்பிற்கு வெளியிலான சுற்றுவட்ட பெருந்தெருக்கள் திட்டத்தின் கீழ் நீர்க்குழாய்களை பொருத்தும் பணிகள் காரணமாக, கடுவெல மற்றும் மற்றும் மாலபே பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிவரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

விஹார மாவத்தை, வெலிவிட்ட, விமுக்தி மாவத்தை, பிட்டுகல, கஹன்தொட்ட, சுதர்ஷன மாவத்தை, கடுவெல – கொத்தலாவலயில் இருந்து சந்திரிகா குமாரதுங்க வீதி வரையான பிரதான மார்க்கத்தின் கஹன்தொட்ட வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்