ஒன்-அரைவல் வீசா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைக்கத் தவறிய இந்தியா

ஒன்-அரைவல் வீசா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைக்கத் தவறிய இந்தியா

ஒன்-அரைவல் வீசா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைக்கத் தவறிய இந்தியா

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 11:12 am

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாக ”ஒன் அரைவல் வீசா” (visa-on-arrival) வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது.

எனினும் இலங்கை இந்த நாடுகளின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இலங்கையுடன் பாகிஸ்தான், சூடான், ஈரான் உள்ளிட்ட எட்டு நாடுகள் இந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

ஒன் அரைவல் வீசா நடைமுறையை 180 நாடுகளுக்கு விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அமுல்படுத்த 5 முதல் 6 மாதங்கள் வரை தேவைப்படும் எனவும் இந்திய திட்டமிடல் அமைச்சர் ரஜீவ் சுக்ளா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தினை எதிர்வரும் சுற்றுலா பருவகாலமான ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பின்லாந்து, பிலிபைன்ஸ்,சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு தற்போது இந்தியா ஒன் அரைவல் வீசாவை வழங்கி வருக்கின்று.

இதனை 180 நாடுகளாக அதிகரிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், சூடான்,ஆப்கானிஸ்தான்,ஈரான்,ஈராக்,நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகிய எட்டு நாடுகள் மட்டும் இந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எனினும் இதற்கான காரணங்கள் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்கும் தினத்தில் வழங்கப்படும் குறித்த ஒன் அரைவல் விசா 30 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து உட்துறை அமைச்சு உரிய நேரத்தில் அறிவிக்கும் என இந்திய திட்டமிடல் அமைச்சர் ரஜீவ் சுக்ளா தெரிவித்துள்ளார்.

நாட்டின் 26  சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்