ஐ.தே.க நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் விலகல்

ஐ.தே.க நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் விலகல்

ஐ.தே.க நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் விலகல்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2014 | 5:05 pm

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் இருந்து விலகுவதாக பெரோஸா முஸம்மில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் எவ்வித தொடர்பையும் வைத்திருக்கப்போவதில்லை என கடிதமொன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

தனது கணவர் கொழும்பு மாநகர மேயர் என்பதாலோ அல்லது அவரது வேண்டுகோளின் பேரிலோ நிறைவேற்றுக் குழுவின் அங்கத்துவம் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் அனுசரணையின்றி, காந்தா சவிய மகளிர் அமைப்பை நிறுவி, அதன்மூலம் பல்வேறு சமூக சேவைகளில் தாம் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதே கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ள போதிலும், தலைவர் மற்றும் தலைமைத்துவ சபையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் காரணமாக கட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அற்றுப்போவதாக பெரோஸா முஸம்மில் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை தமது சொத்தாக கருதி சிலர் செயற்படுகின்றமை, பெரும்பாலான கட்சி ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் எனவும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்