உமர் அக்மல் விடுதலை

உமர் அக்மல் விடுதலை

உமர் அக்மல் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2014 | 2:21 pm

போக்குவரத்து பொலிஸாரை தாக்கிய குற்றத்துக்காக  கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் உமர் அக்மல் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் உமர் அக்மல், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக  கைது செய்யபட்டிருந்தார்.

எனினும் விதிமுறைகளை மீறியதாக தன் மீது  குற்றஞ்சுமத்திய பொலிஸ் அதிகாரியை உமர் அக்மல், தாக்கியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில் நேற்று முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மல் சரீரப்பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்