பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2014 | 7:55 am

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலது கை துடுப்பாட்ட வீரரான  உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இவர் கைது செய்யபட்டுள்ளார்.

எனினும் விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சுமத்திய பொலிஸ் அதிகாரியை உமர் அக்மல், தாக்கியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் சி.சி.டி.வி கமராவில்  பதிவாகியுள்ளதாகவும், அதனை முழுமையாக பார்வையிடும் பட்சத்திலேயே  தன்னுடைய பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கம் விலகும் என உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்